கண்ணகிகோவில் சித்திரா பவுர்ணமி விழா. பக்தர்கள் பூஜை வழிபாடுகள் வீடுகளில் நடத்த கற்புக்ககரசி மங்கலதேவிகண்ணகி அறக்கட்டளை சார்பில் வேண்டுகோள்.
தேனிமாவட்டம், கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லைப்பகுதியில் உள்ள மங்கலதேவி மலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி தினத்தன்று தமிழக கேரள பக்தர்கள் இணைந்து கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு மே 7&ல் சித்திரா பவுர்ணமி வருகிறது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், மத்திய மாநில அரசுகளின் உத்தரவின் பேரிலும், பக்தர்களின் நலன் கருதியும் மே7&ந் தேதி மங்களதேவி கண்ணணகி கோயிலில் நடைபெறவேண்டிய பூஜை வழிபாடுகளை பக்தர்கள் அவர்கள் வீட்டிலேயே நடத்தும் படியும், அன்றைய தினத்தில் தங்களால் முடிந்த அளவுக்கு அன்னதானம் தயார் செய்து சமூக இடைவெளியை கடைபிடித்து மக்களுக்கு வழங்கி அம்மன் அருள்பெறவேண்டும் என கற்புக்கரசி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் கோபால் ராயர், செயலாளர் முத்தையா, பொருளாளர் கார்த்திகேயன் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடர் காலை நாளிதழ் ஆன்லைன் உடன்....