சிங்கபெருமாள்கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் ஊராட்சியில் மகளிர் குழுவினரை ஏமாற்றி பல இலட்சம் முறைகேடு. திமுக பிரமுகரின் மனைவியின் நூதன கொள்ளை அம்பலம்...

சிங்கபெருமாள்கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் ஊராட்சியில் மகளிர் குழுவினரை ஏமாற்றி பல இலட்சம் முறைகேடு. திமுக பிரமுகரின் மனைவியின் நூதன கொள்ளை அம்பலம்...


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டசெட்டிபுண்ணியம் ஊராட்சிக்குட்பட்ட அன்புநகர் பகுதியில் வசிக்கும் மகளிர் குழு பெண்கள் முப்பத்திற்கும் மேற்பட்டோரிடம், செட்டிபுண்ணியம் கிராமத்தை சார்ந்த திமுக பிரமுகர் தங்கராஜ் மனைவி ஜீவிதா, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மகளிர் குழு உறுப்பினர்களை, மகளிர் குழு கூட்டமைப்பு மூலம் பயிற்சி அளிப்பதாகவும் அதற்காக ஊக்கத்தொகையாக 7200 ரூபாய் பணம் பெற்றுத்தருவதாக கூறி, அவர்களை சிங்கபெருமாள்கோவில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு யூனிபார்ம் அணிவித்து பயிற்சி அளிப்பதுபோல் புகைப்படம் எடுத்துள்ளார்.


காட்டாங்கொளத்தூர் 
ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் தையல், கைவினை பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சிகள் அரசாங்கத்தின் மூலம்
கிராம்புற பெண்கள் சுயதொழிலில் மேம்பாட்டுற்காக வழங்கப்பட்டு வருகிறது.இதனை மகளிர் குழு கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜீவிதா, அன்பு நகரை சார்ந்த மகளிர் குழு பெண்களுக்கு ஒரு நாள் பயிற்சிக்கு வரும்படியும் அப்படி வருபவர்களின் வங்கி கணக்கில் அரசாங்கம் சார்பில் 7000 முதல் 7200 ரூபாய் வரை வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார், மேலும் அதிலிருந்து தனக்கு 3200 ரூபாய் கமிஷன் தொகையாகவும் கேட்டும் உள்ளார்.


அதன்பின்னர் கடந்த மாதம் அரசு சார்பில் பயிற்சிக்கு சென்ற அனைவரின் வங்கி கணக்கிலும் 7200 வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஜீவிதா அவர்களிடன் 3200 ரூபாயை கமிஷனாக பெற்றுள்ளார்.இதேபோன்று செட்டிபுண்ணியம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மட்டுமே 500 க்கும் மேற்பட்டோரிடம் மகளிர் குழு கூட்டமைப்பினை பயன்படுத்தி பல இலட்ச கணக்கில் நூதன முறையில் அரசு பணத்தை கையாடல் செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.


தமிழக அரசு மகளிர் மேம்பாட்டுக்காக மகளிர் குழு கூட்டமைப்பினை அமைத்து அதன்மூலம் ஒவ்வொரு பெண்களும் வாழ்வில் முன்னேற்றம் கான அவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் அதற்கான ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி ஜீவிதா
மகளிர் குழுக்களுக்கு முன்னேற்றத்திற்காக (B.L.F) மூலம் வழங்கும் உதவி தொகையை கையாடல் செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே சர்ச்சையை எழுப்பியுள்ளது. மேலும், இந்த இந்த முறைகேட்டில் அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது ஜீவிதா அரசு அதிகாரி ஒருவரிடம் பேசும் செல்போன் பதிவில் வெளியாகியுள்ளது.


அரசு மகளிர் குழுக்களுக்கான பெருமளவிலான தொகையை (BLF திட்டம்) மகளிர் குழு கூட்டமைப்பின் மூலமே வழங்கி வரும் நிலையில் இதனை பயன்படுத்தி முறைகேட்டில் ஜீவிதா மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் ஈடுபட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மகளிர் முன்னேற்றத்திற்காக அரசு கொண்டு வந்த திட்டத்தை முறைகேடகா பயன்படுத்தி மகளிர் குழுவினர்க்கு முறையான பயிற்சி அளிக்காமலும், பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறி பொய்யான தகவல் அளித்து அதன் மூலம் அரசு மக்களுக்கு அளித்த ஊக்கத்தொகை முறைகேடு செய்த ஜீவிதா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்களிடம் இருந்து பெற்ற 3200 ரூபாயை திருப்பித்தர வேண்டும் எனவும் அப்பகுதியிலுள்ள மகளிர் குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


மேலும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகள் நடந்துவருவதாக தெரிவிக்கும் நல்லுள்ளம் கொண்ட அதிகாரிகள், இதனை தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image