திருப்பத்தூரில் காடுவெட்டி ஜெ குரு வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் பாமக சார்பில் மௌன ஊர்வலம்..

திருப்பத்தூரில் ஜெ. குரு வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக சார்பில் மௌன ஊர்வலம்...


 


பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ. குருநாதன் கடந்த ஆண்டு மே- 25 ஆம் தேதி உடல்நலம் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஜெ. குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று நாடு முழுவதும் பாமக சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனேரி கிராமத்தில் ஜெ. குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் தொழிலதிபரும் பாமகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பு செயலாளர் ஏ.பி.சிவா தலைமையில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் போன்ற விளையாட்டுகளுடன் ஊர்வலம் அனேரியின் பிரதான சாலைகள் வழியாக ஜெ. குருவின் உருவம் பதித்த படத்தை தேர் போல அலங்கரிக்கப்பட்டு மௌன ஊர்வலம் வெகுசிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ஞான மோகன், ஒன்றிய செயலாளர் சிலம்பரசன், நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image