சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு டியூஜெ மாநில தலைவர் வாழ்த்து செய்தி...

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு டியூஜெ மாநில தலைவர் வாழ்த்து செய்தி...


             சர்வதேச பத்திரிகையாளர்கள் தினமான இன்று அனைத்து பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி நோயான கொரானா வைரஸை எதிர்த்து தங்கள் உயிரையும் துச்சமென மதித்து உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்து மக்களுக்கு அளித்து வரும் சிறப்பான சேவையை புரிந்து வருகிறார்கள்.


 இந்த நேரத்தில் இதயபூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் கொரானா ஒழிப்புப் போரில் தங்களை ஈடுபடுத்தி அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ பரிசோதனை யாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இன்னும் மருத்துவத்துறை ஊழியர்கள்,அரசு ஊழியர்கள், அரசின் பல்வேறு துறையைச்சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
 கொரானா நோய் காரணம் காட்டி பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிகை ஊடக நிறுவனங்கள் ஆட்குறைப்பு,ஊதியக் குறைப்பு ஆகிவற்றை செய்து வரும் இந்த வேளையில் நமது  தோழர்கள் கொரானா தொற்று  ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 உயிரை பணயம் வைத்து செய்தி சேகரித்து கொடுத்த தோழர்கள்  பாதிக்கப்பட்டு  நூற்றுக்கணக்கில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 இந்த நிலையில் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை வெளியிட முடியாமல் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மீது அரசின் உயர் பொறுப்பில் இருக்கின்ற ஆளுகின்ற மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களே, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் ,பொய் வழக்குகள் போடவும் துணையாக நிற்கிறார்கள் என்பது வெட்கக்கேடான வேதனையான செயலாகும்.


கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல்  இறுதிவரை நான்கு பத்திரிகையாளர்களில்,இரண்டு பத்திரிகையாளர்கள் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.இரண்டு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்  சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருப்பது வேதனையான நிகழ்வாகும்.



ஒரு பக்கம் கொரானா நோய் தாக்குதல் மறுபக்கம் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு ,காவல்துறை தாக்குதல் பொய் வழக்குகள் என மும்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி பத்திரிக்கையாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் நின்று போராடி வருகிறார்கள்.


அர்ப்பணிப்போடு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும் கொரானா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் பத்திரிக்கையாளர்கள், அவர்தம் குடும்பத்தார், மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி களப்பணியாளர்கள் அனைவரும்  விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!


மேலும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் இந்த மும்முனை தாக்குதலுக்கு எதிராக, பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இப்பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் பத்திரிகையாளர்களைஅறை கூவி அழைக்கிறது இந்த இக்கட்டான நேரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் குறைந்தபட்சமாக ரூபாய்10 ஆயிரம் நிவாரணத் தொகைய. வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
சர்வதேச பத்திரிக்கையாளர்கள் தினமான இன்று   பத்திரிகைகள், ஊடகங்களை, பாதுகாப்போம்!
பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம்!!
பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் நலன்களை பாதுகாப்போம் என்று சபதமேற்போம்!!!


என  தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் 
பிஎஸ்டி புருஷோத்தமன் தனது அறிக்கையில் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


 


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image