கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க நடந்த நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் செல்லத்துரை தலைமை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் குருசாமி வரவேற்றார். ஒன்றிய பிரதிநிதி செல்வம், கூட்டுறவு வங்கி உறுப்பினர் கொத்தாள குமார், அவைத்தலைவர் ராமலிங்கம் என்ற குட்டி, செயற்குழு உறுப்பினர் ராமையா, இளைஞர் அணி சுரேஷ், பொருளாளர் குலசேகரம் 1 உறுப்பினர்கள் குருசாமி, மூக்காண்டி, தர்மலிங்கம் என்ற ராசு, இடைகால் செயலாளர் சி.எம்.குமார், தகவல் தொழில் நுட்ப அணி பால் ஜெயசீலன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் செல்லத்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...