ஜவ்வாது மலையில் சொத்து தகராறில் விவசாய நிலத்தில் பயிரை நாசம் செய்த கும்பல் மீது வழக்கு பதிவு. தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலிசார் தீவிரம்...

ஜவ்வாது மலையில் சொத்து தகராறில் விவசாய நிலத்தில் பயிரை நாசம் செய்த கும்பல் மீது வழக்கு பதிவு. தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க போலிசார் தீவிரம்...



திருப்பத்தூர் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய  சந்தனம் வாசனை வீசும் ஜவ்வாது மலையில் புதூர் நாடு,புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு  ஊராட்சிகளும்  உட்பட   30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் புதூர் நாடு ஊராட்சி வழுதலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்  குப்புசாமி இவருக்கு பூர்வீக சொத்து உள்ளது. அஃதே பகுதியைச் சேர்ந்த பெரிய சாந்தி காரன் காளி மகன் காளி மற்றும் அவரது மகன்கள் சிவப்பிரகாசம், கோவிந்தராஜ், காளிமுத்து உட்பட 12 நபர்கள் ஒன்று சேர்ந்து  குப்புசாமி மகன் சத்தியராஜ் என்பவரிடம் இந்த சொத்தில் எங்களுக்கு உரிமை உள்ளது என கூறி அடிக்கடி பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் மேற்கண்ட நபர்கள் 16 பேரும் ஒன்று சேர்ந்து உனக்கு கொடுக்கப்பட்ட சொத்தில் எங்களுக்கும் உரிமை உள்ளது என கூறி 1 ஏக்கர் பரப்பளவில்  செய்யப்பட்டு இருந்த தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் விவசாய நிலத்தை அழித்தனர். இதனை தடுக்க சென்ற சத்தியராஜ் என்பவரை கடுமையான ஆயுதங்களை கொண்டு  கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் கை, கால்கள் உடைக்கப்பட்ட நிலையில்  உயிருக்கு  ஆபத்தான நிலையில் இருந்த  சத்தியராஜை   அருகில் இருந்த ஊர் மக்கள்  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து  தகவல் அறிந்த   திருப்பத்தூர் கிராமிய காவல் துறை ஆய்வாளர் மதன லோகன்  மற்றும் போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சத்தியராஜ் கொடுத்த புகாரின் பேரில்  16 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 16 நபர்களை பிடிக்கும் முயற்சியில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர்  ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் சிறிய தகராறு காரணமாக 10 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஜவ்வாது மலையில் சொத்துக்காக உறவினர்களை டிராக்டர் கொண்டு கொலை செய்ய  முயன்ற சம்பவம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image