பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலே கண்டுபிடிக்க முடியாது அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி...

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதிமுகவில் ஊழல் என்பதை கண்டுபிடிக்க முடியாது - அமைச்சர் கடம்பூர் செ ராஜு


 


பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதிமுகவில் ஊழல் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்றும்,திமுக என்ன தான் குழுக்கள் அனைத்தும், சல்லடை போட்டு அலசினாலும் அப்பழுக்கற்ற இந்த அரசுக்கு களங்கம் கற்பிக்க முடியாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு தெரிவித்துள்ளார்.


 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் தனிய படுத்தப்பட்டுள்ள சுப்பிரமணியபுரம் மற்றும் ஸ்டாலின் காலனி பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்து கொண்டு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அண்ணா பஸ் நிலையத்தில் பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள், நகைப் பட்டறை தொழிலாளர்கள் ஆகியோருக்கு உணவு பொருட்களை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில் எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக ஒரு கனவு காண்பார்கள்,தாங்கள் ஆட்சிக்கு வந்தது போல கனவு காண்பார்கள், தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக சில விஷயங்களை கூறுவார்கள்,பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதிமுகவில் ஊழல் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது,ஊழலின் ஊற்று இடமே திமுக தான்,1975ல் பஞ்சம் வந்த போதும் நிவாரணம் வழங்குவது மற்றும் பூச்சி மருந்தில் ஊழல் செய்தவர்கள் திமுக,விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து, ஊழலுக்காக நாட்டில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்,திமுக என்ன தான் குழுக்கள் அனைத்தும், சல்லடை போட்டு அலசினாலும் அப்பழுக்கற்ற இந்த அரசுக்கு களங்கம் கற்பிக்க முடியாது.இது மக்களுக்கும் தெரியும்,கொரோனா தடுப்பு பணியில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் அனைத்து துறை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் தியாக உணர்வோடு மக்களுக்கு பணியாற்றி வருகின்றனர்.இதில் குற்றம் சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவிற்கு தோல்வி தான் மிஞ்சும்.இதில் விளம்பரம் தேட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.சினிமா துறைக்கு மத்திய அரசு மூலம் என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதை குறித்து தமிழக முதல்வர் மூலமாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,நடிகர்களின் சம்பள விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்பது ஆர்கே செல்வமணிக்கு நன்றாக தெரியும்.தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தால் அதற்கு அரசு உதவும்.கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் திரையரங்கு திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் எ


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- தமிழ் சுடர் காலை நாளிதழ்...மர


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image