திருப்பத்தூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி..

திருப்பத்தூரில் தொண்டு நிறுவனமான சேஞ்ச் நிறுவனம் சார்பில் பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி...


திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் மற்றும் அகர்பதி தொழிற்சாலைகள் பெரும் அளவில் இயங்கி வருகின்றன. இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வெளி நாட்டு செலாவணியை ஈட்டித் தரும் தொழிலாக இந்த தொழில்கள் செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் நிறுவனங்களில் பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொழிற்சாலைகள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில். தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் பெண் தொழிலாளர்களின் நலன் கருத்தில்கொண்டு பெண் தொழிலாளர்களுக்காக அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக போராடிவரும் தனியார் தொண்டு நிறுவனம் திருப்பத்தூர் அடுத்த பிருந்தாவனம் பகுதியில் இயங்கும் சேஞ்ச் தொண்டு நிறுவன இயக்குனர் பழனிவேல்சாமி தலைமையில் கிராமங்களிலிருந்து தோல் மற்றும் அகர்பத்தி மற்றும் பிடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் 1600 மதிப்புள்ள அரிசி மற்றும் மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் சரஸ்வதி மற்றும் பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்....


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image