திருப்பத்தூரில் லிங்கமலை சேவா  அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவி மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..

திருப்பத்தூரில் லிங்கமலை சேவா  அறக்கட்டளை சார்பில் கொரோனா நிவாரண உதவி மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..


திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை எதிரில் லிங்கமலை சேவா அறக்கட்டளை சார்பில்  கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு அறக்கட்டளை  செயலாளர் மணி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு ஆதரவுற்ற முதியோர்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக  முக கவசங்கள், கிருமி நாசினி, பழங்கள், உணவு பொட்டலங்கள் அடங்கிய தொகுப்பினை 150 நபர்களுக்கு வழங்கினார்.
 இதில் அறக்கட்டளை தலைவர் முனிராஜ், பொருளாளர் கவுதம், துணை செயலாளர்கள் அரிகிருஷ்ணன், சாமு மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 15 நாட்களுக்கு லிங்கமலை சேவா அறக்கட்டளை சார்பில் உணவு மற்றும் முக கவசங்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி- சரவணன்..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image