புதுக்கோட்டையில் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.. மக்கள் மகிழ்ச்சி...

புதுக்கோட்டையில் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.. மக்கள் மகிழ்ச்சி...


புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலைராயசமுத்திரம் கிராம ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் ஊராட்சி நிர்வாகம்  சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி பெரியசாமி தலைமையில்  துணைத் தலைவர் சுஜாதாசின்னத்துரை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்  முன்னிலை  அரிசி மற்றும் காய்கறிகள்,  முக கவசங்கள், கிருமி நாசினி அடங்கிய தொகுப்புகளை   திருமலைராயசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட  இந்திராநகர், கணபதிநகர், உப்புப்பட்டி, தோப்புப்பட்டி, சூலைப்பட்டி உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் உழைப்பை சார்ந்து வாழ்ந்து வருவதாலும் கொரோனா நோய்த் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு இருக்கும்  இந்த வேளையில் உணவுக்கு மிகவும் சிரமப் படுவார்கள் என்பதைக் கணக்கில் கொண்டு, கொரோனா தடுப்புப் பணியுடன் சேர்ந்து மக்களைக் காக்கும் நோக்கத்துடன் இந்த உணவுப் பொருட்கள் மற்றும் முகக்கவசங்களையும் வழங்கும் பணியையும் செய்தனர்.


சூலைப்பட்டி மக்களிடத்தில் இப்பொருட்களை வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் ராணிபெரியசாமி பேசுகையில்


கொரோனா நோய்த் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு இவ்வேளையில் தனித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு இணங்க அவரவர் வீட்டிலிருந்தாலே நோயை ஒழிக்க முடியும் என்பதோடு இந்த வேளையில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் சிரமப்பட வேண்டாம் என்ற உயரிய நோக்கத்துடன் வீடு தேடி வந்து பொருட்களை வழங்கியிருக்கிறோம். இதனைப் பெற்றுக் கொண்டு அரசின் அறிவிப்பை அனைவரும் கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


இதில் ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் குடிநீர் ஆப்பரேட்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- செந்தில்குமார்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image