வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று இந்திய ஆங்கில இலக்கியத்தை உலக மக்களிடம் கொண்டு சேர்த்த ஆர்.கே.நாராயணின் நினைவு தினம்...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று இந்திய ஆங்கில இலக்கியத்தை உலக மக்களிடம் கொண்டு சேர்த்த ஆர்.கே.நாராயணின் நினைவு தினம்...


இவரது படைப்புகள் எளிய நடையும், இழைந்தோடும் நகைச்சுவை உணர்வும் கொண்டவை.


இவரது கதாபாத்திரங்கள் யாவும் சிற்றூர்களைச் சார்ந்தவை.


சுவாமியும் நண்பர்களும் என்பதிலிருந்தே அவரது எழுத்தாக்கங்கள் ஆரம்பித்தன.


முதலில் இவரது நாவல்களை வெளியிட எந்த பதிப்பகமும் முன்வரவில்லை.


இறுதியாக நண்பரிடம் கிரகாம் கிறீனியிடம் ஆரம்ப வரைதலைக் காட்டினார். கிறீனி இதை மிகவும் பாராட்டியதுடன் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்தார்.


இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைப் பின்பற்றி பல நாவல்களைப் பிரசுரித்தார்.


இவரது கைடு (வழிகாட்டி) புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.


இவ்விருது பெற்ற முதல் ஆங்கில நூல் இதுதான்.


1964 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.


நோபல் பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டவர்.


லீட்ஸ் பல்கலைக்கழகம் (1967) மைசூர் பல்கலைக்கழகம்(1976) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (1973) ஆகியவை இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின .


பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே லக்ஷ்மண் இவரது இளைய சகோதரர்..


ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்திருக்கும் நாராயண் எல்லோரையும் சமமாக நடத்தும் பண்பு கொண்டவர்.


*மண்ணை விட்டு மறைந்தாலும் இந்த எழுத்தாளர் அவரது எழுத்துக்கள் மூலம் நம்மிடையே இன்றும் பசுமையாக வாழ்ந்து வருகிறார் என்பதுதான் உண்மை.*


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை காண்க...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image