ஆவின் சிறப்பு உணவுகளை பயனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வழங்கினார்...

ஆவின் சிறப்பு உணவுகளை பயனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நேரில் சென்று வழங்கினார்..


கொரோனா நோய்தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்தில் விடுதிகளில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் உண்டு மகிழ தமிழ் நாடு முதலமைச்சர் ஆவின் சிறப்பு உணவு பெட்டகங்களை வழங்க ஆணையிட்டதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் பிரேம வாசம் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றிய சிறப்புப்பள்ளியின் 135 குழந்தைகளுக்கு மாவட்ட மாற்றுத்திறளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி நேரில் சென்று வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தின் பிஸ்கெட், சாக்லேட், பாதாம் மில்க், சிறப்பு உணவு பொருட்கள் அடங்கிய பெட்டகம் ஒவ்வொரு மனவளர்ச்சி குன்றிய சிறார்களுக்கும் வழங்கப்பட்டது. பிரேமவாசம் மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தில் ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு போக முடியாமல் விடுதியில் தங்கியுள்ள 135 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் தலா ஒரு சிறப்பு உணவு பெட்டகங்களை நபர்க்கு ஒரு பெட்டி வீதம் 135 பெட்டகங்கள்135 குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு உணவு பெட்டகம் பெற்ற குழந்தைகள் மகிழ்ச்சியோடு, அவற்றை பெற்றுக்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image