மதுகடைகளை திறக்க வேண்டும் என்பதில்  தமிழக முதல்வர் எடப்பாடியார் விரும்பி  முடிவெடுக்கவில்லை என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்ஙதிரபாலாஜி பேட்டி

மதுகடைகளை திறக்க வேண்டும் என்பதில்  தமிழக முதல்வர் எடப்பாடியார் விரும்பி  முடிவெடுக்கவில்லை என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்ஙதிரபாலாஜி பேட்டி..


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் காரணமாகத்தான் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வந்த ஒருவர் மூலம் திருத்தங்கல்லில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு  பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து சமூக விலகளை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸை தடுக்க முடியும்.. கொரோனா வைரஸினால்  இறப்பு என்பதை இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டம்  திகழ்கின்றது. மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள்  தங்களால் இயன்ற அளவிற்கு பொதுமக்களுக்கு  நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடியார்  உத்தரவுக்கு இணங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பை  உறுதி செய்யும் வகையில் தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு செயலை செய்யும் போது ஆதரவாக சிலரும் எதிர்ப்பாக சிலரும் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். பிரச்சனை அடிப்படையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் கடந்த 5 நாட்களாக டாஸ்மாக் கடைகளைத் திறந்த போதிலும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் எடப்பாடியார் விரும்பி ஒன்றும் முடிவெடுக்கவில்லை. கர்நாடகா பாண்டிச்சேரி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை  திறக்கப்பட்டதால் எல்லையோரத்தில் குடியிருக்கும் சிலர் அங்கு சென்று வரிசையில் நின்று வாங்கியதே காணமுடிந்தது. இதன் மூலம் போலி சரக்குகள் தமிழகத்திற்கு உள்ள நுழைய வாய்ப்புகள் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் நகராட்சி ஆணையாளர்கள், யூனியன் ஆணையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து அரசுப் பணியாளர்களும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்காலிகமாக பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசிநடவடிக் எடுக்கப்படும். ஒப்பந்த பணியாளர்கள் படிப்படியாக நிரந்தர பணியாளராக ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்றைக்கு ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால்  முகவர்கள். பால் உற்பத்தியாளர்கள் பணியாளர்கள் என 1500 நபர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கியுள்ளோம். இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.  மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளனர் .தமிழக அரசின் துரித நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை கட்சிஉடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடர் காலை நாளிதழ்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image