திருப்பத்தூர் அருகே  உணவின்றி தவித்த  பார்வையற்றவர்களுக்கு வீடு தேடி  உதவி செய்த   காவல் ஆய்வாளர்..

திருப்பத்தூர் அருகே  உணவின்றி தவித்த  பார்வையற்றவர்களுக்கு வீடு தேடி  உதவி செய்த   காவல் ஆய்வாளர்..


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் வெளிமாநிலம் தொழிலாளர்கள் மற்றும் புரத்தார் வட்டம் பகுதியில் வசிக்கும் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றோர், அப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளிகள் என 20க்கும் மேற்பட்டவர்கள்  உணவின்றி தவித்து வருவதாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய  ஆய்வாளர் மதனலோகன்  அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனது சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தானே நேரில் சென்று  வழங்கினார். மேலும் இவர்களுக்கு தொடர்ந்து  காய்கறிகள், உணவுப் பொருட்கள் காவல் துறை சார்பில்  வழங்கப்படும் என தெரிவித்தார்.  பொதுமக்கள் எந்த நேரத்திலும் திருப்பத்தூர் கிராமிய  காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அப்பகுதி மக்களிடம் கூறினார்.
அப்போது உதவி ஆய்வாளர் ராணி மற்றும் காவலர் தமிழ்வாணி ஆகியோர் உடன் இருந்தனர். தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். 20க்கும் மேற்பட்டவர்கள்   உணவின்றி தவிப்பதை அறிந்து அவர்களுக்கு உரிய நேரத்தில்  உதவி கரம் கொடுத்த ஆய்வாளர் மதன லோகன் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image