யானை, குதிரை, குரங்கு உட்பட விலங்குகளுக்கு உணவு கொடுத்த பால்வளத்துறை கே.டி.ராஜேந்திர பாலாஜி.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோயில் யானை ஜெயமால்யதாவிற்கு அனைத்து வகை பழங்கள் மற்றும் காய்கறி உணவு வகைகளை பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் வழங்கினார்கள் அதனைத்தொடர்ந்து ராஜபாளையத்தில் வனப் பகுதிக்கு செல்லும் வழியில் குதிரை, பசு மாடுகளுக்கு பழ வகைகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். அதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வாழைப்பழங்கள் வழங்கினார். தொடர்ந்து மலைவாழ் பகுதியில் வசிக்கும் 27 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், போர்வையை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜபாளையம் நகர செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் குருசாமி, ராஜபாளையம் கூட்டுறவு சங்க பால்வளத்துறை தலைவர் வனராஜ் , நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் முருகேசன், சிவகாசி நகரக் கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் முருகையா பாண்டியன், அறங்காவலர் உறுப்பினர் பரமசிவன், நடிகர் பிரபாத் , ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் கதிரவன், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் ராமராஜ், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், இளைஞரணி தங்கப்பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடர் காலை நாளிதழ்...