திருப்பத்தூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்... May 18, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் இலங்கை நடைபெற்ற போரில் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதனை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மாவட்ட செயலாளர் டி.கே.சங்கர் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் பிரகாசம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அறிவழகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...