செங்கல்பட்டு திம்மாவரம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவினர் பாதபூஜை மற்றும் கொரோனா நிவாரணம்..
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அதிமுகவினர் சார்பில் மலர்தூவி, பாதபூஜை செய்யப்பட்டு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மாவரம் ஊராட்சியில் அலுவலத்தில் ஊராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மின் ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள், பஞ்சாயத்து பணியாளர்களுக்கு திம்மாவரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரமணி அன்பழகன், முன்னாள் துணை தலைவர் நீலமேகம், ஊராட்சி செயலாளர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீராமன் ஆகியோர் ஏற்பாட்டில் கொரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
அதிமுக மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும் அதிமுக காட்டாங்கொளத்தூர் ஒன்றி செயலாளருமான எஸ்.கௌஸ் பாஷா தலைமையில், அதிமுகவினர் தூய்மை பணியாளர்களுக்கு பட்டாடை அணிவித்து, பாதபூஜை செய்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
மேலும் திம்மாவரம் ஊராட்சியில் பணியாற்றும் பகுதியில் பணியாற்றும் மின் ஊழியர்கள், தூய்மை காவலர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் சுமா. 40 பேருக்கு கொரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி, மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது காட்டாங்குளத்தூர் அதிமுக ஒன்றிய பொருப்பாளர் பலராமன், வில்லியபாக்கம் குமரன், மேலமையூர் சங்கர், குருவன்மேடு ரவி, மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள் மன்மதன், தம்பிரான், கருணாநிதி, மஞ்சப்பன், ராஜன், குமார், பாண்டியன், கிருஷ்ணன், பிரசன்னா, தாஸ், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- உத்தமன்...