ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தனிநபரின் அட்டகாசம் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் கடும் வேதனை...

புதுப்பேட்டை முத்தானூர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பொதுமக்களை வஞ்சிக்கும் ஊராட்சி செயலாளர்..


 


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட  புதுப்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் அருகில் உள்ள முத்தானூர் என்ற பகுதியில் காவாங்கரை என்கிற ஓடை உள்ளது. இந்த ஆற்று ஓடையில் அஃதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தனது வீட்டின் உள்ள கழிவுநீரை( கழிப்பிடம்) பைப் லைன் அமைத்து   இந்த ஓடையில் கலக்கும் வகையில் செய்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் இடமும் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ஊராட்சி செயலாளர் சீனிவாசன் என்பவருக்கு உறவினர் ஆவார் இந்த மணிவண்ணன் என்பவர். குறிப்பாக இந்த காவாங்கரை ஓடை அருகில் 20க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பருப்பு கிணறு என அழைக்கப்படும் கிணற்றிலிருந்து தான் குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மணிவண்ணன் வீட்டில் கழிவுநீர் ஓடையில் கலப்பதால் அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் பல்வேறு நோய் தொற்றுக்கள் உருவாகும்  இடமாக தற்பொழுது விளங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கொசு உற்பத்தி அதிகளவில் உருவாகி அப்பகுதியில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சம்பவங்களும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக ஓடையில் மழைநீர் தேங்கி இருக்கும் சூழ்நிலையிலும் இந்த கழிவுநீரும் கலந்து பெருமளவில் மீண்டும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் சீனிவாசனிடம் கேட்டபோது. இச்சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது இந்த பிரச்சனை குறித்து ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தவிர எனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என ஆவேசமாக கூறினார்.. தற்பொழுது தமிழகம் முழுவதும் அசுரவேகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கழிவுநீரை ஓடையில் கலந்து துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது இதை சரிசெய்ய ஒன்றிய நிர்வாகம் முன்வருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு??.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் தமிழ் சுடர் காலைநாளிதழுடன் இணைந்திருங்கள்..



 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image