உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாமக நிர்வாகி...

 


உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாமக நிர்வாகி...


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊனமாஞ்சேரி  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே 1 உலக தொழிலாளார்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின்  காட்டங்கொளத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளார் எம்.எம். நித்தியானந்தம் முன்னிலையில்  செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளாரும், மக்கள் நல சமூக சேவையாளாரும் ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி வேட்பாளாருமான ஊனை .எம்.ஜீ. மகேந்திரன் தலைமை தாங்கி  தூய்மை பணியாளர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் ஓவ்வொரு தூய்மைபணியாளார்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், மற்றும் கபசுர நீர் பவுடர் , முகக்கவசம், பாதுகாப்பு கையுறைகள், கிருமிநாசினி, சோப்புகள் அடங்கிய நலத்திட்ட தொகுப்பு பையை வழங்கி அதனுடன் ஊக்கத்தொகை வழங்கி இருகரம் குப்பி வணங்கி அவர்களை வாழ்த்தினார்.


இதனைத் தொடர்ந்து அவர்களின் வேலைகள் குறித்தும் அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில்  பா.ம.க .கட்சியின் நிா்வாகிகளான  ஊனை எம்.ஜி.மணிவணன் , ஏ.ராஜாபாதர்  , கே.விஜயரங்கம்  , எம்.இ. ராதாகிருஷ்ணன், டி. தனசேகர்,  கே.தீனதயாளன், வி.ரவி, டி.குமார் , இ.லோகு , கே.குமரேசன் மற்றும் ஊர்பொதுமக்கள் இளைஞர்கள் கலந்துகொண்டனர்கள் .


இதுகுறித்து மக்கள் சமூக நலசேவையாளாரும் பா.ம.க.கட்சியின் செங்கல்பட்டுமாவட்ட துணைச்செயலாளாரும் ஊனமாஞ்சேரி ஊராட்சியின் தலைவர் பதவி வேட்பாளாருமான ஊனை எம்.ஜி.மகேந்திரன் கூறுகையில் எங்கள் ஐயா மற்றும் சின்ன ஐயா அன்புமணிராமதாஸ் ஆகியோர்களின் ஆணைக்கிணைங்கவும் மாநிலப் பொதுச் செயலாளாரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான மக்கள் சேவகருமான திருக்கச்சூர் கி.ஆறுமுகம் வழிகாட்டுதலின்படியும் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளாருமான  காரணை மு.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த மாா்ச் மாதம் 26ஆம் தேதியிலிருந்து ஊனமாஞ்சேரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , கிருமி நாசினி மருந்து தெளித்தல் அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல் வட மாநிலத்தவர்கள், கல்லுடைக்கும் தொழிலாளார்கள் ,ஆதரவற்றோர் ஆசிரமங்கள் என அனைத்திற்கும் எங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றோம்.  இதுவரை இங்கு ஒரு நபர் கூட பாதிப்பு ஆளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மே 1உலக தொழிலாளார்கள் தினம் பொதுமக்களுக்காக எங்கள் ஊராட்சியில் தன்னலம் தங்களது குடும்பம் எல்லாம் மறந்து உழைத்து வரும் உன்னதமான ஊராட்சி பணியாளர்களை நான் தெய்வமாகத்தான் பாா்க்கிறேன் எனக்கு தெரிந்த முறையில் அவர்களுக்கு மாியாதை செலுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


இதே சமயத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் என்னும்கோவிட் 19யை கட்டுபடுத்தவும் பொதுமக்களுக்கு பரவாமல் தடுக்கவும் அயராது  இரவு பகல் விடாது உழைத்துவரும் உலகம் முழுக்க உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், காவலர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மை பணியாளார்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் ஆளும் அரசுகளுக்கும் எனது மனமாா்ந்த நன்றிகளுடன் தொழிலாளார்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
தொழிலாளார்கள் தினத்தையொட்டி தூய்மை பணியாளார்களுக்கு மரியாதை செலுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்த நிகழ்ச்சி காட்டாங்கொளத்தூர் ஓன்றியளவில் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- உத்தமன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image