திருப்பத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழப்பு. வனத்துறை விசாரணை...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கதிர் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஜவ்வாது மலையில் இருக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருகின்றனர். குறிப்பாக அரியவகை மான்கள் தண்ணீர் தேடி தற்போது அடிக்கடி கிராம பகுதிகளுக்கு படை எடுத்து வருகின்றது. இதனால் ஒரு சில சமூக விரோதிகளின் கண்ணில் பட்டு வேட்டை ஆடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள மடு என்ற பகுதியில் 10 வயது உடையை அரிய வகை மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது மான் வருவதை அறிந்த தெரு நாய்கள் மானை துரத்தி சென்று கடிதத்தில் மான் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர். தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் போதிய தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி- சரவணன்...