வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீண்டும் பணிக்குத் திரும்ப  வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் மனு.....

வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீண்டும் பணிக்குத் திரும்ப  வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் மனு.....



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி ஆணையர்  சிசில் தாமஸ் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பழ வியாபாரிகளின் தள்ளு வண்டிய தூக்கி எறிந்தார்.
இதனால் ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.


இந்த நிலையில் வாணியம்பாடி நகர பகுதிகளில் தற்போது வரை 5 நபர்கள் மட்டுமே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். இதற்கு முழு காரணம் வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் தீவிர விடாமுயற்சி மற்றும் அவரின் கடின உழைப்பால் மட்டுமே சாத்தியமானது. என அப்பகுதி மக்கள்  மட்டுமின்றி பலதரப்பட்ட வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.



இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வாணியம்பாடியில் உள்ள 18 தொழில் சங்கங்களின் பேரமைப்பினர்  சார்பில்  சிசில் தாமஸை மீண்டும் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணி அமர்த்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


அப்போது பாதிக்கப்பட்ட பழக்கடை பெண்கள் கூறுகையில்


நகராட்சி ஆணையரின் செயல்பாடு எங்களுக்கு சிறுதளவும் வருத்தம் இல்லை அவர் செய்தது பொதுமக்களின் நலனுக்காகவே இச்சம்பவத்திற்கு எங்களின் தவறும் முக்கிய காரணமாக உள்ளது ஆகவே தமிழக அரசு வாணியம்பாடி நகராட்சி ஆணையாராக மீண்டும் சிசில் தாமஸை  பணியில்  அமர்த்த வேண்டும் எனவும் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image