வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் ஊர்க்காவல் படைவீரர்களுக்கு கொரோனா உதவி கரம்... May 18, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் ஊர்க்காவல் படைவீரர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய காவல் ஆய்வாளர் சந்திரசேகரன்... புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து ஊர்க்காவல் படைவீரர்களும் தங்கள் வீடுகளை மறந்து சமூக சேவை ஆற்றி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாணியம்பாடி நகர காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகரன் 600 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 25 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக வழங்கினார். ஒருவரின் கஷ்டத்தை அறிந்து உரிய நேரத்தில் செய்யும் உதவி போன்று வேறு ஒன்றும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது...