ஜோலார்பேட்டை அடுத்த டி. வீரப்பள்ளி கிராமத்தில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய நிர்வாகிகள்... May 19, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் ஜோலார்பேட்டை அடுத்த டி.வீரப்பள்ளி கிராமத்தில் அமைச்சர் வீரமணி சார்பில் கொரோனா நிவாரண உதவியாக அரிசி மற்றும் மாளிகை பொருட்கள் வினியோகம்... திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. வீரமணி ஏற்பாட்டில் இரு தினங்களுக்கு முன் 900 டன் அரிசி 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மாளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சி ஊராட்சியாக கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணி அந்தந்த பகுதிகளில் உள்ள அதிமுக ஊராட்சி கழக செயலாளர்கள் தலைமையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சோமநாயக்கன்பட்டி ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு டி. வீரப்பள்ளி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதில் ஊராட்சி கழக செயலாளர் மாசிலாமணி, அம்மா பேரவை நிர்வாகி திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்... இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடர் காலை நாளிதழ்... செய்தி- கோவி.சரவணன்...