திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் தனியார் மருத்தவமனைகள் இயங்கும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தகவல்...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் நாளைமுதல் திறந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை வழங்கிட திருப்பத்தூர் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கூறியதாவது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு தடை நாட்களில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டது. நாளை முதல் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி இயங்கலாம்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு
வரும் நோயாளிகள் விவரங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா என்பதை குறித்து தெரிந்து கொண்டு சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.
நோயாளிகள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியினை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் மருந்து சீட்டு வழங்கும் முறையை தவிர்த்து கைபேசி மூலம் தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
பணம் பெறும் நடைமுறையும் பாதுகாப்புடன் செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய தடுப்பு அறைகளை அமைத்து பாதுகாப்புடன் பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும் தொடர்ந்து வரும் பரிட்சம் பெற்ற நோயாளிகளுக்கு கைபேசி மூலமாக ஆலோசனை வழங்கி வீடுகளுக்கே மருந்துகளை வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தெரிவித்துள்ளார்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...