கனிமொழியுடன் காணொலி ஆலோசனையில் கலந்துகொண்ட திருப்பத்தூர்  மாவட்ட மகளிரணி அமைப்பாளர்  கவிதா தண்டபாணி...


கனிமொழியுடன் காணொலி ஆலோசனையில் கலந்துகொண்ட திருப்பத்தூர்  மாவட்ட மகளிரணி அமைப்பாளர்  கவிதா தண்டபாணி...


திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மாநில மகளிரணி தலைவர் கனிமொழி தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மகளிரணி நிர்வாகிகளிடம்  காணோலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி யிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது
“கொரோனா என்ற கொடிய அசுரன் தற்போது அதிவேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் முழு  ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் உள்ள  பெண்களின்  நிலைமை பற்றியும்  குறிப்பாக கிராமப்புற பெண்களின்  நிலைமைகள் பற்றி இந்த காணோலி ஆலோசனை கூட்டத்தில் கேட்டார். குடும்ப வன்முறைகளில்  பெண்கள் சந்திக்கிறார்களா?  உங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தின் நிலைமை   எப்படி இருக்கு என்று கேட்டார். அதுவும் டாஸ்மாக் திறந்த பிறகு குடும்ப வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் அவரவர் பகுதியில் பெண்களின் சமூக பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு பற்றி அக்கறை செல்லுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன் பின் மகளிரணி செய்து வரும் உதவிகள் பற்றிக் கேட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பகுதிகளில் ஆற்றி வரும் மக்கள் பணிகளை குறிப்பிட்டுச் சொன்னோம். அப்போது கனிமொழி, ‘யார் அதிகம் உதவி செய்கிறோம், யார் குறைவாக உதவி செய்கிறோம் என்பது தற்போது  பொருட்டல்ல. இந்த காலத்தில் மக்களுக்கு  உதவி என்பதே மிகவும்  முக்கியம். அதில் அளவு முக்கியம் அல்ல. அதனால் உங்களை வருத்திக் கொள்ளாமல் உங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். இந்த காணோலி ஆலோசனை திமுக  மகளிரணி நிர்வாகிகளுக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது என திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி கூறினார்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி- சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image