மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் மனு...
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் ஆதரவுற்ற முதியோர், வடமாநில தொழிலாளிகள் என பலரும் பயன்பெறும் வகையில் திமுக சார்பில் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களை ஒன்று இணைவோம் வா என்று ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கான உதவி எண் 9073090730 என்ற செல் போன் எண்ணை அறிவித்தார். அந்த எண்ணிற்கு இதுவரை 15 லட்சம் பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக மக்களின் நலன் கருத்தில் கொண்டு திமுக சார்பில் அளிக்கப்படும் பயணிகளுக்கு தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ சூரியகுமார், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வடிவேல் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...