சிவகாசியில் ஆதரவற்ற முதியோர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்..

சிவகாசியில் ஆதரவற்ற முதியோர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார் ..


தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிற்கிணங்க விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக மாவட்டம் முழுவதிலும் ஏழை எளிய மக்களுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி நிவாரண பொருட்களை நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார் சிவகாசியில் ஆதரவற்ற முதியோர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறுசுவை அசைவ உணவு மற்றும் உடைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார் சிவகாசி அருகே ஜீவக்கல் ஆதரவற்றோர் ஆஸ்ரமத்தில் உள்ள மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் 50 நபர்களுக்கு தலா 2 புதிய உடைகள் மற்றும் அறுசுவையுடன் மதிய உணவு பணியாளர்களுக்கு புதிய உடைகள் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக வழங்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கலெக்டர் கண்ணன் கலந்து கொண்டு புத்தாடை மற்றும் மதிய உணவு வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து சிவகாசி அருகே சாட்சியத்தில் சிஎஸ்ஐ மனவளர்ச்சி குறையுடையோர்  பள்ளியில் ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்கள் உட்பட 32 நபர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் மதிய உணவுகளை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். ஆதரவற்றோர் இல்லங்களில் அவர்கள் தங்கியிருக்கும் நபர்கள் குறித்தும் மனநிலை பாதிக்கப்பட்டு தங்கியிருக்கும் நபர்கள் குறித்தும் அவர்களின் பராமரிப்பு குறித்தும் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கேட்டரிந்தனர். நிகழ்ச்சியில் சப் கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன் சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்,  வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், அதிமுக நிர்வாகி குமரேசன்,  சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக், இளைஞரணி தங்கபாண்டியன், இளைஞர் பாசறை தனுஷ், ஜீவக்கல்  ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் பாண்டியன், செயலாளர் டாக்டர் ராணி, சாட்சியாபுரம் சிஎஸ்ஐ பள்ளியின் நிர்வாக இயக்குனர் தயாலன்பர்னபாஸ், பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் தினகரன், சமூக சேவகி செல்வி.ரெபெக்கா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடர் காலை நாளிதழ்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் நினைவு தினம் இன்று.
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image