ஜோலார்பேட்டை தொகுதி மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக 900 டன் அரிசி வழங்கிய அமைச்சர் வீரமணி...
தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்கால நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நலன் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் கொரோனா நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதனையடுத்து தமிழக அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தலா 10 கிலோ அரிசி சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 900 டன் அரிசிகள் வழங்கும் நிகழ்வு ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழக அமைச்சர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட அச்சக கூட்டுறவு சங்க தலைவர் டி.டி. குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், மல்லகுண்ட ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...