வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்தார் - மே 9, 1866...
கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்
வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.
கோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர். கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார்.
கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.
அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது.
*மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக இவர் கருதப்படுகிறார். காந்தி தன்னுடைய சுயசரிதையில் கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடர் காலை நாளிதழ்...