விதவை மற்றும் இருளர் 705 குடும்பங்களுக்கு ரூ.9.97 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் எ.சி.டி.எஸ் சார்பில் வழங்கினர்...
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுரை அடுத்த கண்டிகையில் உள்ள ஏசிடிஎஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கு காரணமாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வேங்கடமங்கலம் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி மற்றும் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள மேலக்கோட்டையூர், ஆமூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாற்று திறனாளிகளின் குடும்பங்கள், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட குடும்பங்கள், இருளர் குடும்பங்கள் என மொத்தம் 705 குடும்பங்களுக்கு 9.97 லட்சம் ரூபாய் செலவில் அரிசி, பருப்பு, ஆயில், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சக்கரை, குளியல் சோப்பு, துணி சோப்பு, மற்றும் கை கழுவதற்கற்கான கிருமி நாசினி என ரூபாய் 1365 மதிக்க தக்க பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காட்டாங்கொளத்தூர் ஒன்றிம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள மாற்று திறனாளிகள் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு மே தினத்தை முன்னிட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி எஸ் தொண்டு நிறுவனத்ததின் இயக்குநர் முனைவர் தே. தேவன்பு தலைமையில் வண்டலூர் வட்டாட்சியர் செந்தில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர் தாமோதரன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- உத்தமன்-