அதிகார பலத்தால் எரிக்கப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ மரணம்.. அதிமுக நிர்வாகிகள் கைது. போலீசார் தீவிர விசாரணை...  

அதிகார பலத்தால் எரிக்கப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ மரணம்.. அதிமுக நிர்வாகிகள் கைது. போலீசார் தீவிர விசாரணை...
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சிறு மதுரை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால்- ராஜி தம்பதிகளுக்கு ஜெயராஜ், ஜெயஸ்ரீ, ராஜேஸ்வரி, ஜெபராஜ் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயபால் தனது ஊரில் இரண்டு இடத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஒரு கடையில் ஜெயபாலன் உறவினர் ஏழம்மாள் என்ற பாட்டி, கடையைப் பார்த்துக் கொள்கிறார். அந்தக் கடையில் ஜெயபாலன் மகன் ஜெயராஜ், மகள் ராஜேஸ்வரி ஆகியோர் பாட்டியுடன் இரவில் தங்கிக் கொள்வார்கள். மற்றொரு கடையில் ஜெயபால் அவரது மனைவி ராஜி இன்னொரு மகள் ஜெயஸ்ரீ, மற்றொரு மகன் ஜெபராஜ் ஆகியோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் ஜெயபால் குடும்பத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், அதிமுக கிளைச் செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகியோர் குடும்பத்திற்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகையன் மற்றும் கலியபெருமாளின் உறவினர் குமரப்பன் என்பவரின் மகன் பிரவீன்.  இவர் நேற்று முன்தினம் (09/05/2020) இரவு சில நண்பர்களுடன் ஏழம்மாள் கடைக்குச் சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் கடை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பிரவீன், ஜெயபால் கடைக்குச் சென்றுள்ளார். அந்தக் கடையும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பிரவீன் ஜெயபால் வீட்டின் கதவைத் தட்டி கடையைத் திறந்து பீடி தருமாறு கேட்டுள்ளார். அதுக்கு ஜெயபாலன் மகன் ஜெயராஜ் வெளியே வந்து நள்ளிரவில் கடையைத் திறந்து பொருள் தரமுடியாது.  நாளை காலை கடையைத் திறந்து தாங்கள் கேட்பதைத் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன், ஜெயராஜை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த ஜெயராஜை அவரது தந்தை ஜெயபால் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்பு ஜெயராஜ் தாக்கிய முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் மீது போலீஸில் புகார் கொடுப்பதற்கு திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் ஜெயபாலின் இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ (இவர் பத்தாம் வகுப்பு மாணவியும் கூட) தீயில் எரிந்த நிலையில் கடையில் கிடப்பதாகச் செல்போன் மூலம் தகவல் வந்தது. உடனே ஜெயபால் பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி உள்ளார். அங்கு சென்று பார்த்த போது சிறுமியின் முகம், உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். அதைக் கண்ட அவரது பெற்றோர் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியிடம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற  நீதிபதி  அருண்குமார் வாக்குமூலம் பெற்றுள்ளார். சிறுமி ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகையன் மற்றும் அதிமுக கிளை கழகச் செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து  கடைக்குள் புகுந்து தன்னை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர். மேலும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி உள்ளார்.  இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமி ஜெயஸ்ரீ சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமி ஜெயஸ்ரீக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் சிறு மதுரை கிராமத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முருகையன் மற்றும் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பிஞ்சு குழந்தையை பெட்ரோல் ஊத்தி எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள். கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image