மறைமலை நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில்...

மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மறைமலை நகரில் வசிக்கும் 32 பார்வையற்றோர்க்கு நலத்திட்ட உதவிகள்..


 


. செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலைநகர், சாமியார் மடம் கேட் பகுதியில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 32 பார்வையற்றோர் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் ஆணையின்படி, மூன்றாவது முறையாக உணவு பொருள் தொகுப்புகள் வழங்கப்பட்டது. கொரோனா நோய்தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள் தொகுப்புகள் அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவது தொடர்பாக, மறைமலைநகர் சாமியார் கேட் பார்வையற்றோர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 32 பார்வையற்ற நபர்களின் குடும்பங்களுக்கு இரண்டு முறை வழங்கப்பட்ட உணவு பொருள் தொகுப்புகள் தீர்ந்து போனதால், மூன்றாவது முறையாக உணவு பொருள் தொகுப்புகள் வழங்க கோறிக்கை பெறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் ஆணையின்படி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடமாடும் சிகிச்சை ஊர்தி மூலமாக, மூன்றாவது முறையாக ஒரு மாத காலத்திற்கு தேவையான அரிசி பருப்பு,எண்ணெய்,மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய உணவு பொருள் தொகுப்புகளை 32 பார்வையற்றோர்க்குநேரில் சென்று வழங்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு தேவையான நடந்து செல்லும் உதவியாக (ஸ்டிக்) வழங்கப்பட்டன.இந்நிகழ்வின்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.



இதுபோன்றசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழுடன் இணைந்திருங்கள்..


. செய்திகள்- உத்தமன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image