திருப்பத்தூரில் திமுக மாவட்ட மாணவரணி சார்பில் 600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய நிர்வாகி...
கொரானா கோரப்பிடியில் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் நகரம் சிவராஜ் பேட்டை, புதூர் மாரியம்மன் கோவில் தெரு, நியூ காலனி தெரு போன்ற பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் தேவராஜ் வழங்கினார். இதில் மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் சவுத்அகமது மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் ஜமாத் குழு தலைவர் சுல்தான் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி. சரவணன்...