வாணியம்பாடி அருகே அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் என 500 பெண்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறி அடங்கிய தொகுப்பினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வழங்கினார்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி சம்பத்குமார் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி அடங்கிய தொகுப்பினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் வழங்கினார் நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் சிவப்பிரகாசம் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெய்சக்தி , கே.பி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...