வாணியம்பாடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கிய நிர்வாகிகள்..

அம்பலூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 50 ஆயிரம் மதிப்புள்ள கொரோனா நிவாரண உதவி..


 


கொடிய வைரஸ் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் தங்கள் வாழ்வாதாரங்களை இழுத்து வாழும் ஏழை எளிய மக்களின் துயரங்களை துடைக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அம்பலூர் ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எழில் ராவணன் தலைமையில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி தலைவர் கரிகாலன் ஆகியோர் கலந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 250 குடும்பங்களுக்கு வழங்கினார். இதில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி துணை தலைவர் சல்மான் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image