அதிமுக காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சார்பில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள்..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில் அதிமுக காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சார்பில் அதிமுக நிர்வாகிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
அதிமுக காஞ்சி மத்திய ( செங்கல்பட்டு) மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஒன்றிய பொருப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள் சுமார் 400 பேருக்கு காட்டாங்குளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ் பாஷா ஏற்பாட்டில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம் முன்னிலையில் துவக்கி வைத்து வழங்கினார்.
இந்நிகழ்வின் போது பலராமன், சல்குரு, சங்கர், குமரன், மாரி, அருள்தாசன், சந்தானகிருஷ்ணன், குணசேகரன், அன்பழகன், சேகர், ரவி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- உத்தமன்...