ஆம்பூர் அருகே கொரானா நிவாரண உதவிகள் 3600 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி... May 21, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் அருகே கொரானா நிவாரண உதவிகள் 3600 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினரும் , மற்றும் தொழிலதிபருமான திரு ரமேஷ் -சித்ரா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட 12 -க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு சுமார் 3 ஆயிரத்து 600 குடும்பங்களுக்கு தரமான அரிசி காய்கறிகள், மளிகை பொருட்கள் கபசுரக் குடிநீர் மற்றும் மாஸ்க்குகள் போன்றவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு சிவன் அருள் அவர்கள்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் என 3600 குடும்பங்களுக்கு சுமார் 18000 கிலோ அரிசியும், 15000 கிலோ காய்கறிகளும் மற்றும் மளிகை பொருட்கள் என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது.மேலும், இலவச மாஸ்க், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவல்லி , ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், மாதனூர் ஒன்றிய வட்டரா வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளி, மண்டல துணை வட்டாட்சியர் பாரதி , தேவலாபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் பாபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேவலாபுரம் ஊராட்சியை சேர்ந்த பெருதனகாரர் முனிரத்தினம், முன்னாள் வழக்கறிஞர் சண்முகம் , ராஜேந்திரன் , பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல் மாங்குப்பம் சங்கர் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...