ஜோலார்பேட்டை நகராட்சியில் திமுக சார்பில்  300 ஏழை எளிய குடும்பங்களுக்கு 7 டன் அரிசி விநியோகம்...

ஜோலார்பேட்டை நகராட்சியில் திமுக சார்பில்  300 ஏழை எளிய குடும்பங்களுக்கு 7 டன் அரிசி விநியோகம்...


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி குடியானகுப்பம் அருகே உள்ள 13 வது வார்டில் திமுக பிரமுகர் ஜி.சக்கரவர்த்தி ஏற்பாட்டில் 300 ஏழை எளிய குடும்பங்களுக்கு திமுக சார்பில் 7 டன் அரிசி விநியோகம் செய்யும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி தலைமை தாங்கினார். நகர செயலாளர்  அன்பழகன் முன்னிலை வகித்தார். கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அனைத்து தரப்பு மக்களும் வேலை வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்காக தவித்து வருகின்றனர். இந்நிலையில் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 25 கிலோ அரிசி வீதம் 300 குடும்பங்களுக்கு ஏழரை டன் அரிசி திமுக சார்பில்  விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக உதவிபெறும் மக்கள் அனைவரையும் சமூக இடைவெளிவிட்டு அனைவரும் வரிசையாக நின்று தலா ஒரு சிப்பம் அரிசியை வாங்கி சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பெரியார்தாசன் மற்றும் வார்டு பிரதிநிதிகள் முனிசாமி, கலையரசன், தளபதி, நவீன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image