திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை...

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மூன்று மணி நேரத்தில் மீட்ட காவல் துறை...


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த முசலிக்கொட்டாய்  பகுதியை சேர்ந்த ஷெரிப் என்பவரின் மனைவி ரோசின்சுல்தானா என்பவருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த நிலையில் இன்று  அரசு மருத்துவமனைக்கு  அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தன்னுடைய அக்காவிற்கும்  பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. உங்களை குழந்தையை கொடுங்கள் காட்டிவிட்டு வருகிறேன் என கூறி குழந்தையை கடத்தி சென்று உள்ளார். இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில்  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல்,தனிபிரிவு ஆய்வாளர் பழனி மற்றும் நகர காவல் ஆய்வாளர் பேபி உட்பட தனிப்படை அமைத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு பெண் ஒருவர் கையில் குழந்தை எடுத்து செல்லும் காட்சியை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது  திருப்பத்தூர் நகரம் தேவங்கர் தெருவை சேர்ந்த நகினா  என்பவர் கடத்தி அவரது வீட்டினுள்ளே  குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நகினா மற்றும் அவரது கணவரை கைது செய்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காலையில் கடத்தப்பட்ட குழந்தை சுமார் மூன்று மணிநேரத்தில் மீட்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலிசாருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களையும் மற்றும் நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image