திருப்பத்தூர் டாஸ்மாக் கடையில்  சரக்கு வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்..

திருப்பத்தூர் டாஸ்மாக் கடையில்  சரக்கு வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்..



கொடிய வைரஸ் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் மது பிரியர்களின் நலன் கருத்தில்கொண்டு கடந்த வாரம்  தமிழக அரசு டாஸ்மார்க் நிறுவனத்தின் மூலம்  மதுபானம் விற்பனை செய்தது. இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் நீதிமன்றத்தையும் நாடினர்.  சென்னை உயர்நீதிமன்றம் மதுபான விற்பனைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் மதுபான விற்பனையை தமிழக அரசு தொடங்கலாம் என இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.. அதனையடுத்து இன்று தமிழ்நாட்டில் மது கடைகள் திறக்கப்பட்டு  ஒருநாளைக்கு 500 டோக்கன்கள் என்ற அடிப்படையில் இன்று விற்பனையை தொடங்கியது.. திருப்பத்தூர் மாவட்டத்தின்  தலைநகரமான திருப்பத்தூருக்கு அருகில் உள்ள  ஏறி கோடி பகுதியில்  என்று 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு மது பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். அதில் ஒருவர்  மதுக்கடை திறக்கப்பட்டது அறிந்து ஓடோடி வந்து மதுவை வாங்கி தலையில் வைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில்  கொண்டாடினர். ஆனால் வீட்டில் மளிகை பொருட்கள் வாங்க ஆண்களை ரேஷன் கடைக்கு அல்லது மளிகைப் பொருட்களை வாங்க  அனுப்பினால் இப்படி ஆர்வமாக செல்வார்களா.. தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image