பையனூர் ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி சார்பில் 2 லட்சம் மதிப்பீட்டில் கொரானோ நிவாரண உதவிகள்..
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, பையனூரிலுள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஆறுபடைவீடு பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரமின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் சுமார் 250 வெளிமாநில தொழிலாளர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் அவர்களால் ரூ.2 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. வளாக இயக்குனர் முனைவர் சத்தியமூர்த்தி, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.பி.சங்கீதா, ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஜெனிஃபர், கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி பத்மநாபன் மற்றும் நாட்டுநலப் பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சுரேந்திரபாபு ஆகியோர் முன்னிலையில் திருப்போரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் வழங்கினர்.
உடன் ராஜராஜேஸ்வரி வி.எ.ஒ. அல்போன்ஸ் உடனிருந்தனர். ஏற்கனவே இப்பல்கலைக்கழத்தின் சார்பாக முதலைமச்சர் மற்றும் பிரதம மந்திரி நிவாரண நிதிக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் மற்றும் தன்னார்வலத் தொண்டர்களுடன் இணைந்து சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- உத்தமன்...