திருப்பத்தூர் அருகே 2 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தடுப்பு அணைமுதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.. May 28, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் அருகே 248 லட்சம் மதிப்பிலான தடுப்பணை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னராம்பட்டி ஊராட்சிக்கும் பேராம்பட்டு ஊராட்சிக்கு இடையில் ஓடும் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பு அணை கட்டப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியீட்டாளர் அதன்பின் பொதுப்பணி துறை அதிகாரிகள் மேற்கொண்ட இடத்தில் தடுப்பு அணை கட்டும் பணியை தொடங்கினார். அதன் பணி நிறைபெற்று அதன் தொடக்க விழா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் திறந்து வைத்தார். அதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, கந்திலி ஒன்றிய முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் குமார் உதவி செயற் பொறியாளர் விஸ்வநாதன் திருப்பத்தூர் பொதுப்பணித்துறை பாசன பிரிவு பொறியாளர் குமார், பணி ஆய்வாளர் பிலிப்ஸ், ஒப்பந்ததாரர்கள் ஆறுமுகம், சங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.. இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..செய்திகள்- கோவி.சரவணன்...