திமுக மாவட்ட இலக்கிய அணி சார்பில் கொரோனா நிவாரண உதவி... May 23, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூரில் திமுக மாவட்ட இலக்கிய அணி சார்பில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைநகரில் உள்ள ஒன்பதாவது வார்டு எல்லம்மன் கோயில் தெருவில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சபியுல்லா ஏற்பாட்டில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 600 ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நகர கழக செயலாளர் எஸ் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் கலிபுல்லா மற்றும் கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்...