வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.. இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக ஏபிஜே அப்துல் கலாம் பதவி ஏற்றுக்கொண்ட தினம் இன்று... May 25, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் டாக்டர் பதவியேற்ற தினம்... இவர் ஒரு தலை சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார். அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர். வீணை வாசிக்கிறார். ஸ்ரீராகத்தை ரசிக்கிறார். தமிழில் கவிதை புனைகிறார். தானோர் இந்தியன் என்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு அறிவியல் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர். *அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.*இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...