வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கை தமிழர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  கொரோனா நிவாரண உதவி...

வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கை தமிழர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  கொரோனா நிவாரண உதவி...


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற பழமொழிக்கு ஏற்ற உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காக  மற்றும் நமது அண்டை நாடான இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும் அவர்களுக்காக உரிமை குரல் எழுப்பி  அவர்களின் விடுதலைக்காக அல்லும் பகலும் பாடுபட்ட வீரர்களின் தியாகம் என்றும் போற்றக் கூடியது.. என தாரக மந்திரத்தோடு தமிழ்நாட்டில் வளரும் நாம் தமிழர் கட்சி சார்பில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா  வைரஸின் தாக்கத்தின் காரணமாக நமது தொப்புள்கொடி உறவுகளான இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் அவர்களுக்கு உதவும் வகையில். வேலூர் அடுத்த  அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள  முகாமில்  ஈழ உறவுகளுக்கு  திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் அம்பலூர் எழில் ராவணன் தலைமையில்  ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதில் வேலூர் மாவட்ட செயலாளர் விக்னேஷ், திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கரிகாலன் வினோத், சதிஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்... உலகத்தையே கட்டி ஆண்டவன் தமிழன் ஆனால் தமிழன் நிலையோ இன்று கேள்விக்குறியாக உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி.சரவணன்..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image