வாணியம்பாடியில் பழ வண்டிகளை கவிழ்த்துவிட்டு பழங்களை தூக்கி எரிந்த சம்பவம். இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையாளர்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஊரடங்கு விதிகளை பின்பற்றி கடைகள் செயல் படுகிறதா என்பதை நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் மற்றும் வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது சமுக இடைவெளியை பின்பற்றாத கடைகளில் பழக்கடைகள் தள்ளிவிட்டும், பழங்களை தூக்கி எரிந்தும் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் மேற்கொண்ட நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு அதிகாரி சிறிதும் கருணையின்றி நடந்து கொண்ட விதம் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இச்செய்தி தொலைகாட்சிகளில் ஒலிபரப்பானதால் பகுதி மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் செய்தியாளரை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரண்டு நாட்களாக சமந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்தும், அரசு விதிகளை பின்பற்றாமல் அதே இடத்தில் கடைகள் வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த கடைகளை அப்புறப்படுத்த இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இது போன்று நடந்துள்ளதால் இன்றைய நிலையில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி சுற்றி உள்ள கிராமங்களில் சென்னையில் இருந்து வந்தவர்களால் கொரோனா நோய் பரவி வருகிறது. சென்னை போல் வாணியம்பாடியில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட கூடாது என்ற காரணத்திற்காகவும், மக்களின் நலன் கருதி இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை மக்கள் தவறாக எடுக்கும்பட்சத்தில் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில் இன்று காலை நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், வட்டாட்சியர் சிவபிரகாசம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட வியபாரிகளிடம் நேரில் சென்று நேற்று நடந்த சம்பவம் குறித்து வர்த்தம் தெரிவித்தும், அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக நிவாரணம் வழங்கினர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...