ஏழை எளிய மக்கள், தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றவர்களுக்கு  தொடர்ந்து உணவு வழங்கும் பாமக நிர்வாகிகள்...

ஏழை எளிய மக்கள், தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றவர்களுக்கு  தொடர்ந்து உணவு வழங்கும் பாமக நிர்வாகிகள்...


ரத்தமின்றி யுத்தம் செய்து வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் தற்பொழுது அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் மத்தியில் மூன்றாம் உலகப் போர் எப்படி வரும் என்று சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருக்கும் பொழுது சைனாவில் தொடங்கிய இந்த கொடிய வைரஸ் பல்வேறு உயிர் பலிகளை வாங்கி வருகிறது.. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில்.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பாமக சார்பில் கடந்த 20 நாட்களாக தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள், ஆதரவற்ற முதியவர்கள், ஏழ்மையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் உன்னதமான பணியை  பாமக  மாவட்ட துணை செயலாளர் ஆதிமூலம் மற்றும் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் மாது, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் காந்தி உட்பட  20 பேர் அடங்கிய குழு நாள்தோறும் 300க்கு மேற்பட்டவர்களுக்கு உணவு தயார் செய்து  அவரவர் இருப்பிடங்களுக்கு இந்தக் குழு இருசக்கர வாகனங்கள் மூலம்  சென்று உணவு வழங்கி  வருகின்றனர்.


தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்"  என்றார்  மகா கவி பாரதியார்.


ஒருவரின் பசியை ஆற்றும் உன்னத பணியை செய்து வரும் பாமக நிர்வாகிகளின் செயலை நாமும் பாராட்டுவோம்...


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image