திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி ஆம்பூரில் தொடர்ந்து செயல்பட்டு வந்த இறைச்சி கடைக்கு சீல்..
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வகையான இறைச்சிக் கடைகள் மறு உத்தரவு வரும் வரை திறக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை பின்பற்றாமல் தொடர்ந்து இறைச்சி கடை திறந்து விற்பனையில் ஈடுபட்டு கடைகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. நிலைமை இப்படி இருக்கையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை பின்பற்றாமல் ஆம்பூர் நகரில் உள்ள உமர் சாலையில் கோழி இறைச்சி திறந்து வைத்து இறைச்சி விற்பனை செய்து வந்த கடை குறித்து ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் இறைச்சி கடைக்கு சீல் வைத்தார். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள பகுதி ஆம்பூர் பகுதி ஆகும். இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை என்பதை ஆம்பூர் மக்கள் உணர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து ஆகும்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்....