வாணியம்பாடியில் விற்பனைக்காக காய்கறி கொண்டுவரப்பட்ட விவசாயி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து பலி..
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 100% முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கொண்டுவரப்படும் காய்கறிகளை செட்டியப்பணுர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேமித்து வைக்கும் இடத்திற்கு உற்பத்திப் பொருட்களான காய்கறிகளை வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஓமகுப்பம் பகுதியை சேர்ந்த உமாபதி என்ற விவசாயி இன்று வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் உமாபதியை பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காய்கறி விற்பனைக்காக வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...