ஆவின்பாலினை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை  அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ...

ஆவின்பாலினை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை  அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ...


  சிவகாசியில்  செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறுகையில்,


சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்களான டான்பாமா, டிப்மா சார்பில் 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. லாரிகள் மூலமாக தொழிலாளர்களுக்கு நேரிடையாக சென்று கொடுக்க முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் கஷ்டத்திற்காக அரசுடன் , ஆலை உரிமையாளர்களும் இணைந்து உதவுகின்றனர். மாவட்டத்தில் தேவையான அளவு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களான அச்சு தொழில், கட்டுமான தொழிலில் உள்ள  அனைவருக்குமே நிவாரண தொகை வழங்கப்படும். பட்டாசு தொழிலாளர்கள் அனைவருக்குமே நிவாரண தொகை வழங்கப்படும். கிடைக்காதவர்களுக்கு விரைவில் உரிய முறையில் பணம் கொடுக்கப்படும். குடும்ப அட்டைக்கு அரிசி, ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள இந்த ஒரு மாத காலமும் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். குடிநீர் பிரச்னை இல்லாமல் கவனிக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கிறது. அனைத்து துறையினரும் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர். ஆவின் பணியாளர்கள் முறைப்படி விற்பனை செய்கின்றனர். தடையின்றி கிடைத்து வருகிறது. ஆவின்பாலினை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடர் ஆன்லைனில்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image